NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

 அமைச்சர் இல்லாத 19 மாவட்டங்கள்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

சென்னை: த.வெ.க., அமைச்சரவையில், 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரசை சேர்ந்த இருவர் உட்பட, 32 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். அதில், அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த, 7 பேர் அமைச்சர்களாகி உள்ளனர். சபாநாயகரும் சென்னை மாவட்டம் தான்.

அதேபோல், நாமக்கல்லில் இருந்து 3 பேரும்; காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, துாத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.

மதுரையில் த.வெ.க., சார்பில் ஒருவரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் அமைச்சராகி உள்ளனர். திருச்சி, கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், தலா ஒருவர் அமைச்சராகி உள்ளனர்.

குறிப்பாக, விழுப்புரம், கன்னியாகுமரி, தென்காசி, அரியலுார், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில், ஒரு தொகுதியில் கூட, த.வெ.க., வெற்றி பெறவில்லை.

இதில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு, அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. அதன்படி, 19 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தான் அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளன. மீதமுள்ள, தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலுார், தேனி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட, 19 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is an independent National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP