NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

டிரம்ப்பால் அமெரிக்கர்களுக்கு ரூ.3.4 லட்சம் கோடி செலவு

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால், அமெரிக்கர்கள் எரிபொருளுக்கு 40 பில்லியன் டாலர்( ரூ.3.4 லட்சம் கோடி) செலவு செய்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஈரான் மீது கடந்த பிப்., மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டு தாக்குதல் நடத்தின. இதனால், ஹார்முஸ்ஜலசந்தியை மூடியதோடு, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளின் முயற்சியால் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரவுனி பல்கலை, இந்த போர் காரணமாக அமெரிக்கர்கள் எரிபொருளுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்ற ஆய்வை நடத்தியது.அதில், போர் காரணமாக, அமெரிக்காவில் எரிபொருள் விலை கேலனுக்கு (3.8 லிட்டர் அமெரிக்க மதிப்பின்படி) 4.50 டாலர் அதிகரித்துள்ளது.

இதனால், போர் துவங்கிய பிப்ரவரி மாதம் முதல், நேற்று( மே 17) வரை அமெரிக்க நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக 41.5 பில்லியன் டாலர்( 3.4 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்துள்ளனர். இதுவே ஒவ்வொரு குடும்பத்தினரும் 316 அமெரிக்க டாலரும்(26,400 ரூபாய்)செலவு செய்துள்ளனர்.

இந்த தொகையானது, அமெரிக்க அரசு சாலை கட்டுமானத்திற்கு செலவு செய்ததை விட அதிகம் ஆகும். விமான கட்டுப்பாட்டு அமைப்பு அல்லது முன்னாள் அதிபர்ஜோ பைடன் அறிவித்த மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு ஆகும் செலவை விட அதிகம் ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP