NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

பிரதமர் மோடிக்கு நார்வேயின் உயரிய விருது

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

ஓஸ்லோ: பிரதமர் மோடிக்கு நார்வேயின் உயிரிய விருது வழங்கி அந்நாடு கவுரவித்து உள்ளது. சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைக்கும் 32வது உயரிய விருது இதுவாகும்.

பிரதமர் மோடியின் தலைமைப்பண்பு மற்றும் உறவை பலப்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்காக ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்து உள்ளன.

இதனிடையே ஐந்து நாடுகள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சை தொடர்ந்து ஸ்வீடனுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான உறவுக்கு பிறதமர் மோடி அளித்த பங்களிப்புக்காகவும், அவரது தலைமை பண்பினை அங்கீகரிக்கும் வகையிலும், ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ ராயல் ஆர்பர் ஆப் போலார் ஸ்டார்’, ‘ கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டு இளவரசி விக்டோரியா கவுரவித்தார்.

ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நார்வே சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

அங்கு அவருக்கு நார்வேயின் மிக உயரிய விருதான ‘ கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆப் மெரிட்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரு தரப்பு உறவை வலுப்படுத்தியதற்காகவும், சர்வதேச ஒத்துழைப்பை பாராட்டும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைக்கும் 32வது உயரிய விருது இதுவாகும்.

இந்த விருது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பெருமையை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தியாவுக்கும், நார்வேக்கும் இடையிலான நீடித்த நட்புறவுக்கு ஒரு புகழாரமாகவும் விளங்குகிறது. இது உலகளாவிய முன்னேற்றத்துக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த விருது பிரதிபலிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP