தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
காத்மாண்டு: உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறி, தங்களின் சொந்த உலக சாதனைகளையே முறியடித்து நேபாளத்தைச் சேர்ந்த இரு மலையேறும் வழிகாட்டிகள் புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளனர்.
உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 29,031 அடி உயரத்தில் நம் அண்டை நாடுகளான நேபாளம் – திபெத் எல்லையில் இமயமலையில் அமைந்துள்ளது.
உறைபனி வெப்பநிலை மற்றும் அதிவேக ஆபத்தான காற்று, உச்சியில் ஆக்சிஜன் அளவு குறைவு என எவரெஸ்ட் சிகரத்தை அடைவது என்பது பெரும் சவாலாகும்.
ஆனால், அப் படிப்பட்ட எவரெஸ்ட்டை அதிகமுறை ஏறி சாதனையை, நேபாளத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மலை ஏறும் வீரர்களான காமி ரீட்டா ஷெர்பா மற்றும் லக்பா ஷெர்பா புரிந்துள்ளனர்.
‘ எவரெஸ்ட் மனி தன்’ என்று அழைக்கப்படும் காமி ரீட்டா ஷெர்பா தன் 32-வது வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
கடந்த 1994ம் ஆண்டு ஒரு வணிக ரீதியிலான பயணத்தின் போது எவரெஸ்ட் சிகரத்தில் தன் முதல் காலடித் தடத்தை பதித்தார். அதன் பின் ஒவ்வொ ரு ஆண்டும் சர்வதேச மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டியாக சென்று சிகரத்தை அடைந்து வருகிறார். சில ஆண்டுகளில் ஒரே சீசனில் இரண்டு முறை கூட சிகரம் ஏறியுள்ளார்.
அதேபோல், ‘மலையின் ராணி’ எனப்படும் லக்பா ஷெர்பா, 11-வது முறையாக சிகரத்தை தொட்டு, பெண்களுக்கான தன் சொந்த சாதனையை புதுப்பித்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி, பத்திரமாக தரைமிரங்கிய முதல் நேபாள பெண் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது 11- வது முறையாக ஏறி, உலகிலேயே அதிக முறை எவரெஸ்ட் ஏறிய பெண் என்ற தன் சொந்த சாதனையை மேலும் வலுப்படுத்திஉள்ளார்.
Source: Dinamalar