தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சாவூர்: ‘தமிழகத்திற்கு தாயாக உள்ள தி.மு.க.,வையும், நம் தலைவரையும் நோக்கி, மக்கள் நிச்சயம் வருவர். நிச்சயம், சூரியன் மறுபடியும் உதிக்கும்’ என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது: பத்து நாட்களிலேயே, த.வெ.க., ஆட்சியின் உண்மையான முகத்தை, தமிழக மக்கள், பெண்கள், இளைஞர்கள், ஜென்சி கிட்ஸ் அனைவரும் உணர்ந்திருப்பர். போகப்போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும்.
தாயின் பாதுகாப்பில் இருக்கும் குழந்தை, ‘கிலுகிலுப்பை’ ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளை பார்த்து மயங்கி, அவரிடம் செல்லும். ஆனால், கிலுகிலுப்பை காட்டும் நபரிடம், அந்த குழந்தை நிரந்தரமாக இருக்காது. உண்மையான பாசம் எதுவென தெரிந்து, மீண்டும் தாயிடம் திரும்பி வரும்.
அதுபோல, கவர்ச்சி, மாயாஜாலத்தை காட்டி மக்களை சிலர் ஈர்த்துள்ளனர். இந்த கவர்ச்சி, மக்களின் எந்த பிரச்னைக்கும் தீர்வு காணாது. தமிழகத்திற்கு தாயாக உள்ள தி.மு.க.,வையும், நம் தலைவரையும் நோக்கி, அந்த குழந்தை போல் இருக்கும் மக்கள் நிச்சயம் வருவர். நிச்சயம், சூரியன் மறுபடியும் உதிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Dinamalar