மோடிக்கு ஐ.நா., உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உயரிய விருது: இத்தாலியில் வழங்கி கவுரவிப்பு
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
ஐ.நா., உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமையகத்தில் இன்று (மே 20) நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கம் வழங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகம் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ளது. அந்த அமைப்பு சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அக்ரிகோலா பதக்கம் வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட மோடி, இந்த கவுரவத்தை இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீன் வளர்ப்போர், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அர்ப்பணித்தார். ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கு டோங்யுவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஐநாவின் உயரிய விருதான ‘அக்ரிகோலா பதக்கம்’ வழங்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் உலக அளவில் பால் மற்றும் நறுமணப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. விவசாயம் என்பது இந்தியாவின் வாழ்வாதாரத் தூணாகவும், நமது பண்பாட்டின் முக்கியப் அடையாளமாகவும் விளங்குகிறது.
தொழில்நுட்பம் இந்திய விவசாயத்தின் ஒரு முக்கிய பலமாக மாறிவருகிறது. விவசாயத்தின் எதிர்காலம் என்பது அதிகமாக உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல, சிறந்த முறையில் உற்பத்தி செய்வதில்தான் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அக்ரிகோலா பதக்கம் என்பது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநரால் வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரவமாகும். இது உலகளாவிய உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் நீண்டகால பங்களிப்புகளை ஆற்றிய புகழ்பெற்ற உலகத் தலைவர்களுக்கும், தனிநபர்களுக்கும் வழங்கப்படுகிறது.
பதக்கம் பெற்ற படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அக்ரிகோலா பதக்கத்தை நான் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த கவுரவத்திற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Source: Dinamalar