தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
லண்டன்: ரஷ்யா மீதான கச்சா எண்ணெய் தடையை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தற்போது தளர்த்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல் ரஷ்யா போரைத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன.இந்நிலையில், மேற்காசிய நாடான ஈரானில் நடந்து வரும் போரினால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தன் நாட்டின் தேவைக்காக, ரஷ்யா மீதான கச்சா எண்ணெய் தடையை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தற்போது தளர்த்தியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளது.ஏற்கனவே, அமெரிக்காவும் ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar