NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

 மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தி பெறுவோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி: மாநில அந்தஸ்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பெறுவோம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு பின், முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி அரசின் நலத்திட்டங்கள், மத்திய அரசின் உறவுடன் நன்றாக செய்து வருகிறது. அமைச்சர் பதவிக்காக ரூ.100 கோடி பேரம் நடைபெறுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், யார், யாரிடம் பேசினர்கள் என தெரிவித்தால் விசாரிக்கலாம். தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு பாராட்டுகளையும், முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரியில் இருந்து சென்ற ஆனந்திற்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரி விமான நிலையம் தொடர்பான தமிழக முதல்வருடன் பேசி தமிழகப் பகுதியில் இடம் பெற்று விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பிரதமர் கூறியபடி புதுச்சேரி பெஸ்ட் புதுச்சேரியாக அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. நலத்திட்ட உதவிகளும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.

மாநில அந்தஸ்து தொடர்ந்து வலியுறுத்தி நிச்சயமாக பெறுவோம். பிரதமர் மனது வைத்து ஆளும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக அந்த நம்பிக்கை வெற்றி பெறும். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்த பிறகு வேட்பாளர் யார், எந்த கட்சியை சேர்ந்தவர் என தெரியவரும் என்றார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP