2011ல் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு; மீண்டும் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: 2011ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது.
கடந்த 2011ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. தொடர்ந்து தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த ஜேகே மகேஸ்வரி மற்றும் விஜய் பிஸ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் விசாரணையில் இருந்து தாங்கள் விலகிக் கொள்வதாக அறிவித்தனர். மேலும், வேறு ஒரு அமர்வில் இந்த வழக்கை தலைமை நீதிபதி பட்டியலிடுவார் எனவும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது.
Source: Dinamalar