தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண் இடமாற்றம் செய்து, புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக்கை தேர்தல் கமிஷன் நியமனம் செய்தது.
முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் அபின் தினேஷ் மோதக், சிபிசிஐடி ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக, புதிய போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1996ம் ஆண்டு பேட்ச்
இதற்கு முன்னர் அமல்ராஜ், தாம்பரம் போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் , தேர்தல் நேரத்தில் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், அவரை சென்னை போலீஸ் கமிஷனராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
1996ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அமல்ராஜ், திருப்பூர் ஏஎஸ்பி., ஆக போலீஸ் பணியை தொடங்கியவர். மதுரை ரூரல், தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.பி., ஆகவும், சேலம், திருச்சி, கோவை மாநகர போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். திருச்சி, ராமநாதபுரம், சேலம் டிஐஜி ஆகவும், போலீஸ் அகாடமி இயக்குனராகவும் பணியாற்றியவர்.
Source: Dinamalar