தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
ஆமதாபாத்: சென்னைக்கு எதிரான போட்டியில் முன்கள வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன் குவித்துள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டனர. கடைசி ஒரு இடத்திற்கு ராஜஸ்தான், பஞ்சாப், பஞ்சாப், கோல்கத்தா, சென்னை, டில்லி ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆமதாபாத்தில் நடந்து வரும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்துக்கு துவக்க வீரர்களாக கேப்டன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்த்து 125 ரன் சேர்த்த போது, கில் 64 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, வந்த பட்லரும் அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
சாய் சுதர்சனும், பட்லரும் சென்னை பவுலிங்கை வெளுத்து வாங்கினர். இருவரும் அரைசதம் அடித்தனர். சாய் சுதர்சன் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 27 பந்தில் 57 ரன் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன் சேர்த்தது. சென்னை அணியை பொறுத்தவரையில் முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன், அன்சூல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
230 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னைக்கு, முதல் பந்திலேயே சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார் 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 7வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால், பிற அணிகளின் முடிவைப் பொறுத்து சென்னை அணிக்கு அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும்.
Source: Dinamalar