பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் இன்னமும் செல்வாக்கு; மோடிக்கு இத்தாலி பிரதமர் பாராட்டு
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
நமது நிருபர்பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், மக்களிடையே இன்னமும் செல்வாக்கு இருக்கிறது என பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை இத்தாலி பிரதமர் மெலோனி பாராட்டினார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவும் இத்தாலியும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் 2029ம் ஆண்டுக்குள் 20 பில்லியன் யூரோ மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளன.
பிறகு ரோமில் பிரதமர் மோடியுடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மெலோனி கூறியதாவது: கடந்த மூன்றரை ஆண்டுகளில் பிரதமர் மோடியை நான் 7 முறை சந்தித்து பேசி இருக்கிறேன். முதல் சந்திப்புகளின்போது, நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். மேலும் மரியாதை மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு நேர்மையான நட்பையும் நாங்கள் உருவாக்கி உள்ளோம்.
பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபின், பிரதமர் தனது மக்களிடையே பெற்றிருக்கும் செல்வாக்கின் மூலம் வெளிப்படுவது போல, அவருடைய தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தை பாராட்டுகிறேன். இவ்வாறு மெலோனி கூறினார்.
அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘ இத்தாலி மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு முன்னேற்றம் கண்டு வருகிறது. நமது நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 20 பில்லியன் யூரோ இலக்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவில் உள்ள 400க்கும் மேற்பட்ட இத்தாலிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்குப் பங்களித்து வருகின்றன,’ என்றார்.
Source: Dinamalar