தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை: ஐதராபாத் உடனான பிரீமியர் லீக் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பிரீமியர் லீக் 2026 தொடர் தொடரில் 63வது லீக் ஆட்டம் இன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை அணி, ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
பிளேஆப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கு இது மிக முக்கியமான ‘வெற்றி பெற்றே தீர வேண்டிய’ கட்டாயப் போட்டியாகும். அது மட்டுமின்றி, சொந்த மண்ணில் சென்னை அணி, விளையாடும் கடைசி லீக் ஆட்டமும் இதுவாகும்.
இந்த தொடரின் ஆரம்பத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி இதுவரை நடந்த போட்டியில் இதுவரை பங்கேற்கவில்லை. தன்னுடைய கடைசி போட்டியை சென்னை ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தோனி விளையாடும் கடைசி போட்டி என்று எதிர்பார்த்து மைதானத்தில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால், உடல் நலம் தேறாத காரணத்தால் தோனி இந்த போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கேப்டன் ருத்துராஜ் அறிவித்து விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தொடங்கிய சென்னை அணியினர், 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்துள்ளனர்.
Source: Dinamalar