NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்

கோவை: கோவையில் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்றது. இந்த நிகழ்வு வாக்காளர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். காலை 7 மணி முதலே வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் ஓட்டளித்து வருகின்றனர்.

தேர்தல் என்றால் ஏதாவது ஸ்பெஷல் நிகழ்வு அனைவரது கவனத்தையும் தட்டி செல்லும். அந்த வகையில், கோவை அரசு கலை கல்லூரி ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்கும் நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த ரோபோ, பட்டு பாவடை அணிந்து கையில் ஒரு தாம்பல தட்டில் ரோஜா பூக்கள், சாக்லெட் வைத்து இருக்கிறது, ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் நுழைந்ததும் அன்போடு வரவேற்று சாக்லெட் கொடுக்கிறது.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP