தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: எஸ்ஐஆர் பணிக்கு எதிராக அவதுாறு பரப்பிய காங்., ராகுலின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என பாஜ செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த பணி சரியானதே என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இது குறித்து பாஜ செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செல்லும் என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், அந்த பணிக்கு எதிராக அவதுாறு பரப்பிய காங்., ராகுலின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது தன்னை சுயபரிசோதனை செய்து, அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
எஸ்ஐஆர் பணிகள் குறித்து சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்குப் பின்னடைவு. அரசியல் திறமையின்மையையும் மறைப்பதற்காக, ஜனநாயகத்தின் ஒவ்வொரு அமைப்பின் மீதும் குற்றம் சாட்டி அவதூறு பரப்பும் அனைத்து முயற்சிகளும் பயனற்றவை என்பது சுப்ரீம்கோர்ட்டில் இன்று நிரூபணம் ஆகியுள்ளது. தேர்தல் சமயத்தில்கூட அவர்கள் தீவிரமாகப் பணியாற்றுவதில்லை.
பிறகு வெளியே சென்று, அபத்தமான அறிக்கைகளை வெளியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். எஸ்ஐஆர் பணிகள் மீதான காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டது. அவர்களின் ஒப்பந்தங்கள் சீனாவுடன் தொடர்புடையவை. அவர்களின் சித்தாந்தம் ஐரோப்பாவுடன் தொடர்புடையது. இவ்வாறு சுதான்ஷு திரிவேதி கூறினார்.
Source: Dinamalar