தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
அரக்கோணம்: பட்டா வழங்க, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், வடமாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் தணிகாசலம், 59. இவரிடம், வடமாம்பாக்கத்தை சேர்ந்த வினோத், 45, என்பவர், 1,402 சதுர அடி நிலத்திற்கு, ஆன்லைன் வாயிலாக பட்டா வழங்க சந்தித்துள்ளார்.
இதற்கு, லஞ்சமாக 20,000 ரூபாயை தணிகாசலம் கேட்டுள்ளார். பின், 15,000 ரூபாயாக பேரம் பேசப்பட்டது. இதை விரும்பாத வினோத், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய, 15,000 ரூபாயை தணிகாசலத்திடம் வினோத் கொடுத்த போது, போலீசார், தணிகாசலத்தை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
Source: Dinamalar