NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

மேற்குவங்க முதற்கட்டத் தேர்தல்; 3 மணி நிலவரப்படி 78.77 % ஓட்டுகள் பதிவு

கோல்கட்டா: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்திற்கும் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 294 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. திரிணமுல் காங்கிரஸ் – பாஜ இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ம் தேதி 2வது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இன்று நடந்து வரும் முதற்கட்ட தேர்தலில் 3.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 2.4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகாலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

வன்முறை

இதனிடையே, தேர்தலை சீர்குலைக்கும் விதமாக, நேற்றிரவு முர்ஷிதாபாத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். முன்னாள் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகியும், ஆம் ஜனதா உனயன் கட்சி தலைவருமான ஹூமாயுன் கபீரின் ஆதரவாளர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சூழலில், ஹூமாயுன் கபீர் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட இடத்திற்கு இன்று நேரில் வந்தார். அப்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

35 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை கடந்த 2011ம் ஆண்டு வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மம்தா, தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் 215 இடங்களில் மம்தா கட்சி வென்றது. பாஜ 77 இடங்களைக் கைப்பற்றியது.

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால், 89 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த சூழலில் அங்கு முதல்முறையாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP