NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள்; பஸ் வசதி இல்லாததால் போராட்டம்

சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் வசதிகள் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் பொதுமக்கள், தேர்தலின் பொது, ஓட்டுப்போடுவதற்கான தங்கள் சொந்த ஊர் திரும்புவது வழக்கம். இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த இரு தினங்களாக, சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

குறிப்பாக நேற்றிரவு ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணி வரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. போதுமான பஸ்கள் இல்லாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து அதிகாரிகள் மக்களை சமாதானம் செய்தனர்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP