NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

தவெக அரசுக்கு அதிமுக அணி ஆதரவு; எங்கள் நிலை பற்றி ஆலோசிப்போம் என்கிறார் திருமா

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

சென்னை: ”தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அ.தி.மு.க., அணி ஆதரவு அளித்துள்ளதால், எங்கள் ஆதரவு நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்படும்,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிட கூடாது, மீண்டும் தேர்தல் வந்துவிட கூடாது என்பதற்காகவே, த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம். இதில், ரகசியமாக எதுவும் நடக்கவில்லை; எல்லாமே வெளிப்படையாக நடக்கிறது. நாங்கள் தற்போதும் தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம்; அவர்கள் எப்போது அழைத்தாலும் ஆலோசனை நடத்துவோம்.

வி.சி.க., யாருடனும் பேரம் பேசவில்லை. தி.மு.க., – அ.தி.மு.க., கூட்டணி தொடர்பாக, என்னிடம் யாரும் நேரடியாக பேசவில்லை. என்னை முதல்வராக்க, தி.மு.க., – அ.தி.மு.க., அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை; சில நலம் விரும்பிகள் பேசினர். நாங்கள் ஒரு கட்சி நடத்துகிறோம். எங்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. இரண்டு இடங்களை வைத்து கொண்டு, யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. த.வெ.க., அரசை வெளியில் இருந்து ஆதரித்துள்ளோம். இயற்கையாக நடந்த விஷயத்தை கால தாமதம் என்று வதந்தி பரப்ப கூடாது.

பா.ஜ., ஆதரவு கட்சி என்று, த.வெ.க.,வை நான் விமர்சித்துள்ளேன். அந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தை சமூகநீதி மண், ஈ.வெ.ரா., மண் என்று சொன்னாலும் கூட, பட்டியலினத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆவது எளிதல்ல. அ.தி.மு.க., ஊழல் கட்சி என, முதல்வர் விஜய் விமர்சித்துள்ளார். அக்கட்சி, பா.ஜ., கூட்டணியில் தீவிரமான நட்புடன் இருக்கிறது.

அ.தி.மு.க.,வில் இருந்து சிலர், த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிப்பதில், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனினும், த.வெ.க.,வுக்கு எங்கள் ஆதரவு நிலைப்பாடு குறித்து, வி.சி.க., உயர்நிலை குழுவில் நிச்சயம் ஆலோசிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP