NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

 மத குருமார்களின் மாத ஊதியம் ரத்து மேற்கு வங்க பா.ஜ., அரசு அதிரடி

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் மசூதி இமாம்கள், கோவில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் நிதியுதவி திட்டங்கள், ஜூன் முதல் முற்றிலும் நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார்.

சமீபத்தில், அவர் தலைமையில் மாநில அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நடந்தது.

இது குறித்து, மாநில பெண் கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் கூறியதாவது:

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மேற்கு வங்கத்தில், ஜூன் 1 முதல், ‘அன்னபூர்ணா’ திட்டம் அமலுக்கு வரும். இதன்படி, அனைத்து குடும்ப தலைவியருக்கும் மாதம், தலா 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

அதே போல், அரசு பஸ்களில் ஜூன் 1 முதல் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம். மற்றொரு முக்கிய கொள்கை முடிவாக, மத அடிப்படையில் மசூதி இமாம்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் 3,000 ரூபாய், ஜூன் முதல் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல், கோவில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு மாத ஊதியம் 2,000 ரூபாயும் ரத்து செய்யப்படுகிறது.

மழைக்காலம் துவங்கவுள்ள நிலை யில், வடிகால் அமைப்புகளை மேம்படுத்தவும், உள்ளாட்சி உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிர்வாக பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், இனி ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை அமைச்சரவை கூட்டத்தை கூட்ட அரசு முடிவெடுத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP