ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., ஆட்சியில் லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி மோசடி: போலீஸ் விசாரணை முடக்கம்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
ராமேஸ்வரம்: தி.மு.க., ஆட்சியில் ராமேஸ்வரம் கோவிலில் நடந்த, 3.40 கோடி ரூபாய் லட்டு மோசடி விவகாரத்தில், போலீசார் விசாரணையை துவக்காமல் உள்ளதால், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 2024 முதல், 2026 மார்ச், 13 வரை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தினமும் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்குவதிலும், கோவில் வளாகத்தில் உள்ள கவுண்டரில், லட்டு விற்பனையிலும் முறைகேடு நடந்ததை, மார்ச் 14ல் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை ஆய்வு செய்தார்.
இதில், 3.40 கோடி ரூபாய்க்கு லட்டு மோசடி செய்த கோவில் ஊழியர்கள் பஞ்சமூர்த்தி உட்பட, 6 பேர் மே 14ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
இதன் பின், சஸ்பெண்ட் செய்த ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் உட்பட, 9 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, மோசடி செய்த பணத்தை பெற்று கோவில் நிர்வாகத்திற்கு வழங்குமாறு, மே 15ல் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷிடம் கோவில் இணை ஆணையர் மனு அளித்தார்.
ராமேஸ்வரம் கோவிலில் லட்டு மோசடி விவகாரம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தி.மு.க., ஆட்சியில் நடந்தது என்பதால், பின்னணியில் ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், விசாரணையை உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் தீவிரப்படுத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
இச்சூழலில் புகார் செய்து இன்றுடன், 5 நாட்கள் ஆகியும், இது நாள் வரை போலீசார் விசாரிக்காமல் முடங்கி உள்ளனர். இதனால் மோசடி செய்தவர்கள் மற்றும் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
ஹிந்து அமைப்பினர் கூறுகையில், ‘தி.மு.க., ஆட்சியில் நடந்த மோசடியை போலீசார் விசாரிக்க தயங்கும் மர்மம் என்ன. இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் தலையிட்டு, விசாரணையை துரிதப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்றனர்.
Source: Dinamalar