NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க மேலும் ஒரு மாதம் அனுமதி: இந்திய நிறுவனங்களுக்கு நிம்மதி

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

நியூயார்க்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதியை அமெரிக்கா மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே பல உலக நாடுகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதியை அமெரிக்கா முதன்முதலில் மார்ச் மாதம் அளித்தது.

மேலும் ஏப்ரல் மாதத்தில் அது ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. தற்போது கடலில் ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்களில் இருந்து 30 நாட்களுக்கு எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என இரண்டாவது முறையாக அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த தற்போதைய நீட்டிப்பு உத்தரவு, இந்திய எரிபொருள் நிறுவனங்களுக்கு இடைக்கால நிம்மதியை தந்துள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாலும், இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பெருமளவில் அதிகரித்துள்ளதே அதற்கு காரணம்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP