இஸ்லாம்புரா தற்போது கிருஷ்ண நகர்: லாகூரில் தெருக்களின் பெயர்களை மாற்றும் திட்டம்; பாகிஸ்தான் ஒப்புதல்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
லாகூர்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசு, லாகூர் நகரின் சாலைகள்,தெருக்களின் பெயர்களை மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், முக்கிய நகரமாக விளங்கும் லாகூர், பிரிவினைக்கு முன் இந்திய துணைக்கண்டத்தின் பழமையான மற்றும் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ராமாயணத்துடன் தொடர்புடைய லாகூர், முகலாயர், சீக்கியர், பிரிட்டிஷ் காலம் வரை பல பேரரசுகளின் தலைநகராக இருந்து, கலாசாரம், வணிகம், கல்வி மற்றும் கட்டடக் கலைக்கு புகழ் பெற்றிருந்தது.
கடந்த 1947ல் இந்தியப் பிரிவினை ஏற்பட்டபோது லாகூர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் லாகூரில் உள்ள சாலைகளுக்கு, ஹிந்து மற்றும் பிரிட்டிஷ் காலப் பெயர்கள் நீக்கப்பட்டு, இஸ்லாமிய பெயர்களாகவும், உள்ளூர் தலைவர்களின் பெயர்களாகவும் மாற்றப்பட்டன.இந்நிலையில், லாகூர் பாரம்பரிய பகுதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நகரின் தெருக்கள், சாலைகளின் அசல் மற்றும் வரலாற்றுப் பெயர்களை மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன்னின்று வழிநடத்துகிறார். இதற்கு நவாஸ் ஷெரீபின் மகளான, பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணா நகர், லட்சுமி சவுக், ஜெயின் மந்திர் சாலை, பகவான் புரா உள்ளிட்ட ஏராளமான ஹிந்து பெயர்களும், குயின்ஸ் ரோடு, ஜெயில் ரோடு, டேவிஸ் ரோடு, லாரன்ஸ் ரோடு, எம்ப்ரஸ் ரோடு ஆகிய பிரிட்டிஷ் கால பெயர்களும் மீண்டும் சூட்டப்பட உள்ளன.
Source: Dinamalar