தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
ருத்ரபிரயாக்: கேதார்நாத் செல்லும் வழியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் சிக்கினர்; 10,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டனர்.
உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட நான்கு கோவில்களுக்கு பக்தர்கள் புனித பயணம் செல்லும், ‘சார் தாம்’ யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவில் செல்லும் வழியில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சோன்பிரயாக் – கவுரிகுண்ட் இடையே மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் புனித யாத்திரை தடைபட்டது.
கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மற்றும் அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வழியில் சிக்கினர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப்படையினர் விரைந்து செயல்பட்டு குழந்தைகள் மற்றும் முதியோரை முதலில் வெளியேற்றினர். இடிபாடுகளில் சிக்கி தவித்த 10,008 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கேதார்நாத் பயணம் மீண்டும் தொடர்ந்தது. யாத்ரீகர்களை பத்திரமாக மீட்ட மீட்பு படையினரை பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர்.
Source: Dinamalar