தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் பெண்களை மிரட்டியது, கட்டாய மதமாற்றம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் படி, ‘ஜிம் ஜிஹாத்’ வழக்கு பதிவு செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
உ.பி.,யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி தேஹத் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜனவரி 19ம் தேதி இரவில் சட்டவிரோத மதமாற்றதடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டு குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 17ல் 6,000 பக்க குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, ‘ஜிம்’ எனப்படும், உடற்பயிற்சி கூடம் நடத்தும் நபர்கள் தங்கள் ஜிம்முக்கு வரும் ஹிந்து பெண்களை குறிவைத்து நட்பாக பழகியுள்ளனர். ‘ஜிம் ஜிஹாத்’ எனப்படும் இந்த நடவடிக்கை மூலம் அந்த பெண்களுடன் நெருக்கமாக பழகி அதை படம் பிடித்து வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
அவர்களை கட்டாய மதமாற்றமும் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்களை புர்கா அணிய வைத்ததுடன் மதம் சார்ந்த வசனங்களையும் ஓத செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த குற்றச்செயலுக்கு தலைவராக செயல்பட்ட இம்ரான் கான் மற்றும் மவுலான கலிலுதின் உள்ளிட்ட 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களை மிர்சாபூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Source: Dinamalar