சனாதனத்தை ஒழிப்பது லட்சியம் என்றால் திமுக தேர்தல் அறிக்கையில் கூறாதது ஏன்? விஸ்வ ஹிந்து பரிஷத் கேள்வி
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி: “சனாதனத்தை ஒழிப்பது தான், தி.மு.க.,வின் லட்சியம் என்றால் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அதை கூறாதது ஏன்?” என விஸ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை பொதுச்செயலர் ஸ்தாணுமாலயன் தெரிவித்தார்.
திருச்சியில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சனாதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், பங்கேற்ற ஸ்தாணுமாலயன் கூறியதாவது:
சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிய கருத்து, ஹிந்து சமுதாயத்துக்கு எதிரானது. சனாதன தர்மத்தை ஒழிப்பது தான் அவரது லட்சியம், என்றால், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏன், அது பற்றி சொல்லவில்லை; தி.மு.க., பிரசார கூட்டங்களில் கூட, ஹிந்து சமுதாயத்தை எதிர்த்து பேசாதது ஏன்?
தி.மு.க., ஆட்சிக்கு வரா விட்டால், யார் வர வேண்டும், என்று திட்டமிட்டதாக தெரிகிறது. அதனால் தான், திருக்குறள் வாசிக்க வேண்டிய சட்டசபையில், பைபிள் வாசிப்பவர் சபாநாயகராக உள்ளார்.
திருமாவளவன் போன்றவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும், என்கின்றனர். ஜாதியை ஒழிப்பது தான், சனாதனத்தை ஒழிப்பது என்று சொன்னால், கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை, என்று கூற முடியுமா? முஸ்லிம் மதத்திலும் ஜாதிகள் இருக்கின்றன. அரசு கெஜட்டில், 420 ஜாதிகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
விஸ்வ ஹிந்து பரிஷத் 40 ஆண்டுகளாக, கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும், என வலியுறுத்துகிறது. மதசார்பற்ற அரசு, ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தை மட்டும் கட்டுப்பாட்டில் வைக்கக் கூடாது. ஹிந்து சமுதாயத்தில் குழப்பதை ஏற்படுத்தும் நோக்கில், தி.மு.க.,வும், த.வெ.க.,வும் ஒன்று போல் செயல்படுகின்றன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Source: Dinamalar