NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

எக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.4.48 கோடி அபராதம்; ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

மெல்போர்ன்: குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் பாதுகாப்பு விதிகளை மீறியதாக, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், சமூக ஊடக தளமான, ‘எக்ஸ்’ நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம், 4.48 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஆன்லைன் பாதுகாப்பு ஆணையம் அப்போதைய, ‘டுவிட்டர்’ நிறுவனத்திற்கு ஒரு வெளிப்படைத்தன்மை நோட்டீஸை அனுப்பி இருந்தது.

அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் சார்ந்த பிரச்னைகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுகொள்ளப்பட்டது.

ஆனால், அதற்கு பிறகே அந்த நிறுவனத்தை வாங்கி, ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றியதால் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை என்று கூறி, எலான் மஸ்க் பிடிவாதம் காட்டி வந்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ‘எக்ஸ்’ நிறு வனத்திற்கு, 4.48 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP