தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: நம் ராணுவத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவிடம் இருந்து 4,100 கோடி ரூபாய்க்கு, ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டர்கள் மற்றும், ‘எம்777’ ரக பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள் பெறுவதற்கான ஒப்பந்தங்களை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.
நம் ராணுவத்துக்கான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை நேற்று அனுமதி வழங்கியது. இந்த ஒப்பந்தங்கள் 4,100 கோடி ரூபாய் மதிப்புடையவை.
‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர்கள் மற்றும் ‘எம்777’ பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள், பராமரிப்பு மற்றும் நீண்டகால ஆதரவு சேவைகளுக்காக இந்த ஒப்பந்தங்கள் செய்யப் பட்டுள்ளன.
அதில், அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் நீண்டகால பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளுக்காக 1,900 கோடி ரூபாயும், எம்777 பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள், பராமரிப்புக்கு 2,200 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி, உதிரி பாகங்கள், பழுது பார்ப்பு மற்றும் பயிற்சி சேவைகள் வழங்கப்படும்.
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 30 மி.மீ., துப்பாக்கி, எதிர்ப்பு ஏவுகணைகள், ராக்கெட்டுகள், நீண்ட துார ரேடார் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்க உதவும் சென்சார்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டவை.
‘எம்777’ பீரங்கிகள் மிகவு ம் எடை குறைவானவை. போர் களத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். 20 முதல் 40 கி.மீ., துாரம் வரை குண்டுகளை வீசு ம் திறன் கொண்டது.
இவற்றின் மூலம் நம் ராணுவத்தை போர் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு எதிராக ராணுவத்தை வலுப்படுத்த இது உதவும்.
வேகமாக இலக்கை கணக்கிட்டு சுடும். இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘ஏ.எச் – 64இ அப்பாச்சி’ ரக போர் ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தத்தை போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் செயல்படுத்தும். அதே போல், ‘எம்777ஏ2’ ரக பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை பி.ஏ.இ., சிஸ்டம்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது.
இந்த விற்பனை மூலம் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா முக்கிய சக்தியாக திகழும். நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி தரும் திறன் புதிய ராணுவ தளவாடங்கள் மூலம் மேம்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar