NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

ரேஷன் கடைகளுக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ரமணன் உறுதி

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு: ரேஷன் கடைகளுக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் கூறினார்.

செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தில், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் ஆய்வு செய்தார்.

ஆய்வில், செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன், செங்கல்பட்டு த.வெ.க., – எம்.எல்.ஏ., தியாகராஜன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதன்மை மண்டல மேலளர் முருகானந்தம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

நவீன ஆலையில் தினமும் 100 டன் அரவை செய்ய வேண்டும். ஆனால், ஊழியர் பற்றாக்குறையால், தினமும் 30 டன் அரவை மட்டுமே செய்யப்படுகிறது. 100 டன் அரவை திறனுக்கு ஏற்றார்போல், ஊழியர்கள் நியமிக்க வேண்டும். ஊழியர்களுக்கு, ஒய்வு அறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில், 171 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. தினமும், 153 லாரிகள் மூலம், நெல் ஏற்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 171 லாரிகள் இயங்கினால், நெல் மூட்டைகள் தேக்கம் அடைவதை தவிர்க்கலாம்.

தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனம், விவசாயிகளுக்கு, 10 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டி உள்ளது. விவசாயிகளுக்கு நிலுவை பணம் வழங்கவும், சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதன்பின், உணவு மற்றும் உணவு பொருள் அமைச்சர் வெங்கட்ரமணன் கூறியதாவது;

மேற்குறிப்பிட்ட நவீன அரிசி ஆலையில், தினமும் 100 டன் அரவை அறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை சேமித்து வைக்க, நெல் குடோன்கள் அமைக்கப்படும். ரேஷன் கடைகளுக்கு தரமான அரிசி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை திரும்பிய அமைச்சர்: வில்லியம்பாக்கம் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, அமைச்சர் ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. நவீன ஆலையில் ஆய்வு முடித்த அமைச்சரிடம், விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஆய்வுக்கு செல்லாமல், சென்னை புறப்பட்டு சென்றார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is an independent National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP