லாகூர் தெருக்களுக்கு மீண்டும் ஹிந்து பெயர்: முஸ்லிம்கள் எதிர்ப்பால் முடங்கியது திட்டம்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, லாகூரில் உள்ள சாலைகளுக்கு பிரிட்டிஷ் கால மற்றும் பிரிவினைக்கு முந்தைய ஹிந்து பெயர்களை மீண்டும் சூட்ட இருந்த நிலையில், அதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூர். ராமாயணத்துடன் தொடர்புடைய லாகூர், முகலாயர், சீக்கியர், பிரிட்டிஷ் காலம் வரை பல பேரரசுகளின் தலைநகராக இருந்தது.
கடந்த 1947 பிரிவினையின் போது லாகூர் பாகிஸ்தான் வசம் சென்றது. அதன் பின் லாகூர் சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஹிந்து மற்றும் பிரிட்டிஷ் காலப் பெயர்கள் நீக்கப்பட்டன. அதற்கு பதில் இஸ்லாமிய மற்றும் உள்ளூர் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், லாகூர் பாரம்பரிய பகுதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ், வரலாற்றுச் சிறப்புமிக்க சாலைகள், பஜார்கள் மற்றும் பிற பகுதிகளின் பழைய பெயர்களை மீட்டெடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான லாகூர் பாரம்பரிய பகுதிகள் புனரமைப்பு குழு மற்றும் பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஆதரவுடன், கடந்த 16-ம் தேதி இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.
அதன் படி இஸ்லாம்புரா பகுதி கிருஷ்ணா நகர் என்றும், மவுலானா ஜபர் அலி கான் சவுக் எனும் பகுதி லட்சுமி சவுக் என்றும், பாப்ரி மசூத் சவுக் பகுதி ஜெயின் மந்திர் சாலை என்றும் முஸ்தபாபாத் பகுதியை தர்மபுரா என்றும் மாற்ற இருந்தனர்.
இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அரசை விமர்சித்து பிரசாரம் செய்யப்பட்டது. எனவே அதிகாரிகள் ஹிந்து பெயர்கள் வைப்பதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.
Source: Dinamalar