தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை: ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் முறையாக வீடியோ பதிவு செய்து, ‘பென் டிரைவில்’ பதிவு செய்தவுடன் பட்டுவாடா செய்யும்படி, அதிகாரிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி துறை ஆய்வு கூட்டம், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில், அமைச்சர் ஆனந்த் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், துறை செயலர் பிரசாந்த் வடனேரே, கமிஷனர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஆனந்த் பேசியதாவது:
ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ஊரக குடியிருப்பு திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமானம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், துாய்மை பாரதம் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களால் ஊரகப்பகுதி மக்கள் வாழ்க்கை தரம் மேம்பட, அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும். பணிகளில் எந்த விதமான சுணக்கமும் இல்லாமல், அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
பணிகளின் தரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணிகளை உரிய காலத்தில் முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சாலைகள் மற்றும் பாலங்களின் தரத்தில், எவ்வித சமரசமும் செய்துக்கொள்ள கூடாது. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை, உரிய நேரத்தில் தொழிலாளர்களுக்கு வழங்குவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து பணிகளையும் முறையாக வீடியோ பதிவு செய்து, ‘பென் டிரைவ்’ கருவியில் பதிவு செய்தவுடன் தான், ‘பில்’ தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசியுள்ளார்.
Source: Dinamalar