NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

ஷ்ரேயஸ் ஐயர் சதம்: லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப் அணி

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

லக்னோ: கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சதம் விளாச, பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ‘பிளே-ஆப்’ வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. 10வது தோல்வியை சந்தித்த லக்னோ அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. லக்னோ, வாஜ்பாய் மைதானத்தில் நடந்த போட்டியில் லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதின.

ஏற்கனவே ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்துவிட்ட லக்னோ அணிக்காக சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி, ‘டாஸ்’ வென்று, ‘பவுலிங்’ தேர்வு செய்தது.

லக்னோ அணிக்கு ஜோஷ் இங்லிஸ் அசத்தல் துவக்கம் தந்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் நான்கு பவுண்டரி அடித்தார். அர்ஷின் குல்கர்னி (0), பூரன் (2) நிலைக்கவில்லை. அடுத்து வந்த படோனி, அஸ்மதுல்லா ஓவரில் 4,6,6,2,4 என வெளுத்து வாங்க, மொத்தம் 24 ரன் கிடைத்தன. சஹால் ‘சுழலில்’, பிரப்சிம்ரன் சிங்கின் துடிப்பான ‘ஸ்டம்பிங்கில்’ படோனி (43 ரன், 18 பந்து) சிக்கினார்.

பின் இங்லிஸ், கேப்டன் ரிஷாப் பன்ட் போராடினர். மந்தமாக ஆடிய ரிஷாப் (26 ரன், 22 பந்து, ‘ஸ்டிரைக் ரேட்’ 118.8) சஹால் பந்தில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் அப்துல் சமது கைகொடுத்தார். சஷாங்க் சிங் பந்தில் இங்லிஸ் (72 ரன், 44 பந்து, 9×4, 2×6) அவுட்டானார். பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், யான்சென் பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். லக்னோ அணி 20 ஓவரில் 196/6 ரன் எடுத்தது. அப்துல் சமது (37), அர்ஜுன் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

பஞ்சாப் அணிக்கு ஷமி ‘ஷாக்’ கொடுத்தார். முதல் பந்தில் பிரியான்ஷ் ஆர்யாவை (0) அவுட்டக்கினார். அடுத்த ஓவரில் கொனாலியை (18) வெளியேற்றினார். பின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பிரப்சிம்ரன் சிங் சேர்ந்து லக்னோ பந்துவீச்சை சிதறடித்தனர். இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் ‘யார்க்கரில்’ பிரப்சிம்ரன் (69 ரன், 39 பந்து, 7×4, 2×6) எல்.பி.டபிள்யு., ஆனார். இது, இந்த சீசனில் அர்ஜுன் கைப்பற்றிய முதல் விக்கெட்.

அபார ஆட்டத்தை தொடர்ந்த ஷ்ரேயஸ், ‘டி-20’ அரங்கில் 7,000 ரன் எட்டினார். இத்தொடரில் 6வது அரைசதம் அடித்தார். மொசின் கான் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஷ்ரேயஸ், கிரிக்கெட் லீக் அரங்கில் முதல் சதம் அடித்து, வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி 18 ஓவரில் 200/3 ரன் எடுத்து வென்றது. ஷ்ரேயஸ் (101 ரன், 51 பந்து, 11X4, 5X6), சூர்யான்ஷ் ஷெட்கே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is an independent National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP