தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: வெளிநாடு பயணத்தை முடித்து, டில்லி வந்த உடனேயே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார், பிரதமர் மோடி. விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்று, குளித்துவிட்டு உடனே அமைச்சரவை கூட்டத்திற்கு வந்து விட்டார். ‘ஐந்து நாட்கள் பயணமாயிற்றே… ஓய்வெடுப்பார் என எதிர்பார்த்தால், உடனே அமைச்சரவை கூட்டமா’ என வியந்தனர் மூத்த அதிகாரிகள்.
மாலை 5:00 மணிக்கு துவங்கிய கூட்டம், நான்கரை மணி நேரம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் என, அனைவரும் பங்கேற்றனர். ஈரான் போரால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேசினார் பிரதமர். வழக்கமாக அமைச்சரவை கூட்டம் என்றால், பகோடா, சாண்ட்விட்ச், டீ, காபி, பிஸ்கட் என, பல சிற்றுண்டிகளை சாப்பிட தருவர். ஆனால், இந்த கூட்டத்தில் டீயை தவிர எதுவுமே தரவில்லையாம்.
சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டதால், இந்த ஏற்பாடாம். மத்திய அரசின் செயலர்களாக பணியாற்றுவோர் அனைவரும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். ‘எதற்கு இவ்வளவு கஞ்சத்தனம்? டீ, பிஸ்கட் தருவதால் என்ன பெரிதாக சேமிக்கப் போகின்றனர்’ என, சில அதிகாரிகள் பேசியதும், உடனே பிஸ்கட் தரப்பட்டதாம். கூட்டம் முடிய இரவு 9:30 மணியாகி விட்டது. இரவு சாப்பாடு கிடைக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், அதுவும் ‘கட்.’
இந்த கூட்டத்தில், இன்னொரு விஷயத்தையும் பிரதமர் மோடி கூறினாராம். ‘மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில், பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் உதவ வேண்டும்’ என்றாராம்.
Source: Dinamalar