தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல்: பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்லை சேர்ந்தவர் சுந்தரராஜன், 71. லாரி அதிபர். அவர், தனது பூர்வீக சொத்தை தம்பிக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடிவு செய்தார். அதையடுத்து, நாமக்கல் – மோகனுார் சாலை தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இணை சார்பதிவாளர் நிலை 2ல் அணுகினார்.
அப்போது தானசெட்டில்மெண்ட் பத்திரபதிவு செய்ய சார் பதிவாளர் மனோகரன், 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்தவர், 30,000 ரூபாய் தருவதாக தெரிவித்தார். அதையடுத்த, லஞ்ச பணத்தை, புரோக்கர் சதீஷிடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், லஞ்சம் தர மனம் இல்லாத சுந்தரராஜன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரொக்கப்பணம், 30,000 ரூபாயை, மாலை, சார் பதிவாளர் அலுலகத்தில், புரோக்கர் சதீஷிடம் வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோக்கர் மற்றும் சார் பதிவாளர் மனோகரன் இருவரையும், கையும் களவுமாக பிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம், நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Source: Dinamalar