தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை: விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை நாளை (மே 21) காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தவெக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் தவெக புதிய அரசில் அமைச்சர்களாகினர். அவர்களுக்கான இலாக்காக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆதரவளித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்க முதல்வர் விஜய் சம்மதம் தெரிவித்தார்.
தவெக தரப்பில் இன்று (மே 20) வெளிப்படையாக அமைச்சரவையில் இடம்பெறுமாறு முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சரவையில் இடம் பெற முஸ்லிம் லீக் ஒப்புக்கொண்டுள்ளது. அமைச்சர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.விசிக இன்னும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இன்றிரவு அல்லது நாளை காலை விசிக முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தவெக அமைச்சரவை நாளை (மே 21) காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது.
Source: Dinamalar