தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
கோவை: ”விஜய் எங்கு வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; விஜய் வேலை செய்யட்டும்; நன்றாக பணியாற்ற வேண்டும்” என்று கோவையில் மத்திய பெட்ரோலியம், கேஸ் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறினார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி: பெட்ரோலிய பொருட்களை எந்த அளவுக்கு உயர்த்தினோம் என்பதை பார்க்க வேண்டும். சமுதாய நலனுக்காக, யாராக இருந்தாலும் பாதிக்கப்படக்கூடாது. இரண்டு மூன்று மாதங்களாக பொதுத்துறை நிறுவனங்கள் அடைந்த நஷ்டத்தை ஈடு கட்டவே இந்த விலை உயர்வு. எத்தனை நாளுக்கு இந்த விலை உயர்வு இருக்கும் என குறிப்பிட முடியாது.
தற்போது நடக்கும் போர் எவ்வளவு நாள் நடக்கும் என்பதும் தெரியாது. போரை யாரும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. பெட்ரோல் விலை லிட்டருக்கு 150 ரூபாய் வரை எல்லாம் செல்லும் என்று மக்களை பயமுறுத்தாதீர்கள். மத்திய அரசு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை தரும் திட்டங்களையே செயல்படுத்தி வருகிறது. எதையும் இலவசமாக அவசியம் என்று கொடுக்கவில்லை.
வந்தே பாரத் ரயில் யாரும் எதிர் பார்க்காத அளவில் அமெரிக்காவிற்கு இணையான வசதியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் இருந்து வந்துள்ள விஜய் வேலை செய்யட்டும். மக்கள் எதிர்பார்ப்போடு வாய்ப்பளித்துள்ளனர். நன்றாக பணியாற்ற வேண்டும். கேரளாவில் மட்டுமல்ல, அவர் எங்கு வேண்டுமானாலும் கட்சியை விரிவாக்கம் செய்ய உரிமை உண்டு. ரஜினி இதயத்தில் இருப்பது நம்மால் அறிய இயலாது. தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றும் பணிகள் பயன்பட வேண்டும்.
கேரளாவில் பா.ஜ., இப்போது மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், நாங்களும் கவலைப்படவில்லை. நிச்சயம் வெற்றி பெறுவோம்.காக்ரோச் ஜனதா கட்சி வைத்து பயமுறுத்த வேண்டாம். இதில் வெளிநாடுகள் சதி இருந்தாலும் அதை சமாளிக்க நம்மிடம் வசதி உண்டு.கோவையில், பெட்ரோலியப் பொருள் விநியோகம், எரிவாயு குழாய் பதிக்கும் பணி குறித்து ஆய்வுகள் நடத்தி உள்ளேன்.இவ்வாறு சுரேஷ் கோபி தெரிவித்தார்.
சிறப்பு வீடியோ!
கோவையில் மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் சுரேஷ்கோபி நிருபர்கள் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Source: Dinamalar