தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை:தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சட்ட சபை தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 10ம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, அமைச்சரவையில் முஸ்லீம் இடம்பெறும் என்று அக்கட்சி அறிவித்துவிட்டது. அதேவேளையில், விசிக இடம்பெறுமா? என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், அமைச்சராக வன்னி அரசு பதவியேற்பார் என்று கூறினார்.
தன்னை அமைச்சராக அறிவித்தவுடன் திருமாவளவனுவுக்கு இனிப்பு ஊட்டி விட்ட வன்னியரசு, அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார். அப்போது, வன்னியரசை கட்டியணைத்து முத்தம் கொடுத்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.
நாளை முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகானும், விசிகவின் வன்னியரசும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
Source: Dinamalar