தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி: புதுச்சேரியில், மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ள தே.ஜ., கூட்டணியில், பதவி பங்கீடு முடியாததால், சபாநாயகர் தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
புதுச்சேரியில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், கடந்த ஆட்சியில் போலவே, சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர் பதவிகளை தருமாறு, என்.ஆர். காங்., தலைவரும் முதல்வருமான ரங்கசாமியிடம் பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.
கடந்த 13ம் தேதி, ரங்கசாமி முதல்வராக பதவியேற்றபோது, பா.ஜ.,வை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்.,கை சேரந்த மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாக பதவியேற்றனர். மீதமுள்ள 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகளை பங்கிட்டு கொள்வதில், இழுபறி நீடிக்கிறது.
தங்களுக்கான ஒரு அமைச்சர் பதவியை கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான ல.ஜ.க.,வை சேர்ந்த ஜோஸ் சார்லசிற்கு வழங்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. அதை ரங்கசாமி ஏற்காததால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போனில் தொடர்பு கொண்டு, ‘கடந்த முறை போன்று சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவி வேண்டும்’ என்றார்.
அதற்கு பதிலளித்த ரங்கசாமி, ‘பா.ஜ.,வுக்கு தரும் அமைச்சர் பதவிகளை பா.ஜ., வினருக்குத்தான் தர வேண்டும். சபாநாயகர் பதவியை என்.ஆர்.காங்.,குக்கு விட்டு கொடுங்கள்,’ என கூறியுள்ளார்.
ஆனால், அமித் ஷா ஏற்க மறுத்ததால், சுமூக முடிவு ஏற்படாமல், இழுபறி நீடித்து வருகிறது. சபாநாயகர் பதவி பா.ஜ.,விற்கா அல்லது என்.ஆர்.காங்.,குக்கா என முடிவு செய்யப்படாததால், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
Source: Dinamalar