NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

புதிய பொற்காலம் படைப்போம்: பிரதமர் மோடி

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

ஆஸ்லோ: ” வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியா- நார்டிக் நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய பொற்காலத்தை படைப்போம்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் ஆகியவற்றையும் அவற்றுடன் கூடிய நிலப்பகுதிகளும் சேர்ந்து நார்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. நார்வே சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா- நார்டிக் நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது பகிரப்பட்ட ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை நம்மை இயற்கையான கூட்டாளியாக மாற்றுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் நமது இரு தரப்புக்கு இடையிலான வர்த்தகம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் நார்டிக் நாடுகளின் முதலீடு முக்கியமானதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கிருந்து வரும் முதலீடு 200 மடங்கு அதிகரித்துள்ளது.

உக்ரைன் அல்லது மேற்கு ஆசியா என எதுவாகட்டும், மோதல் விரைவில் முடிவுக்கு வர அமைதி ரீதியிலான முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்போம். பயங்கரவாதம் குறித்து தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை கொண்டு உள்ளோம். இரட்டை நிலைப்பாடு மற்றும் சமரசம் செய்யப்படாது. சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் செய்யப்படுவது அவசியமானது மற்றும் முக்கியமானது.

வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்திற் பங்களித்தது மட்டும் அல்லாமல், நார்டிக் நாடுகளின் பொருளாதாரத்திலும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்துள்ளன. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. 2025 அக்டோபர் முதல், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினோம்.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் டென்மார்க், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் கூட்டாளிகளாக இணைந்துள்ளன. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியா மற்றும் நார்டிக் நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய பொற்காலத்தை படைக்க உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP