NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

ஈரான் விவகாரம்; அதிபர் டிரம்ப்புக்கு ஏமாற்றம் என்கிறார் மார்கோ ரூபியோ

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

வாஷிங்டன்: ஈரான் விவகாரத்தில் உலக நாடுகளின் செயல்பாடுகள் அதிபர் டிரம்புக்கு ஏமாற்றம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதிலும், ஈரான் உலகிற்கு ஒரு அச்சுறுத்தல் என்பதிலும் நேட்டோவில் உள்ள பல நாடுகள் எங்களுடன் உடன்படுகின்றன. எனவே, இது குறித்து தாம் ஏதேனும் செய்யப் போவதாக அதிபர் கூறினார். அவர் அவர்களைப் படைகளையோ, போர் விமானங்களையோ அனுப்பும்படியும் அவர் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் எதையும் செய்ய மறுக்கிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் எங்களுடன் உடன்பட்டால், நாம் உண்மையில் அதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று அதிபர் கூறினார். ஆனால் அனைவரும் ஒழிந்து கொள்கிறார்கள். அதிபர் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார்.

இந்தியா எவ்வளவு எரிசக்தியை வாங்க விரும்புகிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் விற்க நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தற்போது வரலாற்று உச்சத்தில் உள்ளது. எங்களால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும். அவர்களுடன் இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களின் எரிசக்தி தேவையில் ஒரு பெரிய பங்காக இருக்க நாங்கள் விரும்புகிறோம்.

வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மூலமாகவும் சில வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். வெனிசுலாவின் இடைக்கால அதிபர் அடுத்த வாரம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவுடன் இணைந்து செயல்பட பல விஷயங்கள் உள்ளன. அவர்கள் ஒரு சிறந்த நட்பு நாடு, ஒரு சிறந்த கூட்டாளி. அவர்களுடன் இணைந்து நாங்கள் பல நல்ல பணிகளைச் செய்து வருகிறோம். எனவே, இது ஒரு முக்கியமான பயணம். இதை எங்களால் செய்ய முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அங்கு குவாட் அமைப்பினரையும் சந்திக்க உள்ளோம். இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் மற்றொன்றை நடத்துவோம், என்றார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP