NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

 மம்தா வடிவமைத்த கால்பந்து சிலை: அதிரடியாக அகற்றியது பா.ஜ., அரசு

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., ஆட்சியின் போது அமைக்கப்பட்ட கால்பந்து சிற்பத்தை, புதிதாக பொறுப்பேற்ற பா.ஜ., அரசு அதிரடியாக அகற்றியுள்ளது. இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வை சேர்ந்த சுவேந்து அதிகாரி புதிய முதல்வராக சமீபத்தில் பதவியேற்றார். அப்போது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

பிரமாண்ட சிற்பம் குறிப்பாக, மம்தா ஆட்சியின்போது, அரசு கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் பொறிக்கப்பட்ட திரிணமுல் காங்., அரசின் ‘பிஸ்வ பங்களா’ இலச்சினையை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அதற்கு பதிலாக, ‘அசோக ஸ்துாபி’ சின்னத்தை பொறிக்கும் பணிகளை பா.ஜ., அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மம்தா முதல்வராக இருந்தபோது, மேற்கு வங்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு, 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தன. இதற்காக கொல்கட்டாவின் சால்ட் லேக் மைதானத்தின் வி.வி.ஐ.பி., நுழைவாயிலில் பிரமாண்ட சிற்பம் நிறுவப்பட்டது.

பெரிய இரண்டு கால்கள், கால்பந்தை உதைப்பது போலவும்; நடுவே திரிணமுல் காங்., அரசின் இலச்சினையான, ‘பிஸ்வ பங்களா’ மற்றும் ‘ஜோயி’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட பந்தும் இருக்கும் வகையில் சிற்பம் அமைக்கப்பட்டது.

இந்த சிற்பத்தை அப்போது மம்தாவே வடிவமைத்ததாக கூறப் பட்டது.

தலையில்லாமல், இடுப்பு பகுதியில் இருந்து ஆரம்பிக்கும் இந்த சிற்பத்தின் வடிவமைப்பு மற்றும் குறியீடுகள் அப்போதே கால்பந்து ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது ஆட்சி மாறி இருக்கும் நிலையில், சால்ட் லேக் மைதானத்தில் நிறுவப்பட்ட விசித்திர சிலை நேற்று அகற்றப்பட்டது.

அவசியமே இல்லை முன்னதாக இது குறித்து மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் நிசித் பிரமாணிக் கூறுகையில், ”இடுப்புக்கு கீழே இரண்டு கால்கள், அதற்கு மேல் ஒரு கால்பந்து என பார்ப்பதற்கே அழகு இல்லாமல், மிகவும் விகாரமான நிலையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

”ரசனையே இல்லாமல் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை, நுழைவாயிலில் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை,” என்றார்.

சிற்பத்தை அகற்றுவதோடு மட்டுமில்லாமல், சால்ட் லேக் மைதானத்தை உலகத் தரத்துக்கு இணையாக உயர்த்தப் போவதாகவும் பா.ஜ., அரசு அறிவித்துள்ளது.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is an independent National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP