NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

 மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் மன்னிப்பு கேட்டார் நடிகர் ரன்வீர் சிங்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

மைசூரு: காந்தாரா திரைப் படம் குறித்து விமர்சித்து பேசிய, பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங், உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, கர்நாடகாவின் மைசூரு சாமுண்டி மலையில் நேற்று சுவாமி தரிசனம் செ ய்து மன்னிப்பு கேட்டார்.

கன்னட இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, இயக்கி நடித்த, காந்தாரா திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்று, வசூலை குவித்தது.

கடந்தாண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசினார். அப்போது, காந்தாரா திரைப்படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரம் குறித்து விமர்சிக்கும் வகையில் முகபாவனை காண்பித்தார். இதற்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீசில், ரன்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, நடிகர் ரன்வீர் சிங் சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் வழக்கு விசாரணை, நீதிமன்றம் வரை சென்றது. பலதரப்பட்ட விசாரணைக்கு பின், மைசூரு சாமுண்டி மலையில் உள்ள கோவிலுக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்பதாக, நடிகர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றமும், ஒரு மாதத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை, மைசூரு சாமுண்டி மலைக்கு முக கவசம் அணிந்தபடி வந்த ரன்வீர் சிங் கோவிலுக்குள் சென்றார். முதலில், கோவில் முன் உள்ள விநாயகரை பிரார்த்தித்த அவர், சாமுண்டீஸ்வரி தேவியை தரிசித்தார். பத்து நிமிடம் வரை அமர்ந்து தரிசித்த அவர், பின் அங்கிருந்து சென்றார்.

இது தொடர்பான, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய பிறகே பலருக்கும் தெரியவந்தது.

இது குறித்து சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பா ட்டு ஆணைய செயலர் ரூபா கூறுகையில், ”பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நேற்று காலை 7:30 மணிக்கு, சாதாரண பக்தர் போல வந்திருந்தார். ”அவருக்கு கோவில் ஊழியர்கள், மாலை அணிவித்து வரவேற்றனர். கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார்,” என்றார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is an independent National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP