NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

இப்போதே குற்றம் கூறக்கூடாது; தவெக அரசுக்கு அவகாசம் தரணும் என்கிறார் பொன் மாணிக்கவேல்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

கோவை; தவெக அரசுக்கு ஓராண்டு நேரம் கொடுக்க வேண்டும், மாறி மாறி இப்பவே குற்றம் சாட்டக்கூடாது என்று ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்க வேல் கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டி;

இந்த அரசாங்கத்தை பற்றி நான் விமர்சிக்க மாட்டேன். எப்போது என்றால் ஒரு வருடத்திற்கு நான் எதையும் விமர்சிக்கவே மாட்டேன். அவர்களுக்கு ஒரு நேரம் தரவேண்டும். எல்லாரும் மாறி, மாறி அவர்களை விமர்சிக்கக் கூடாது. நல்லவங்களை நல்லவர்களாக பார்க்க வேண்டும்.

பொதுமக்கள் வரிப்பணத்தில் கை வைக்க மாட்டேன், மற்றவர்களையும் கைவைக்க விடமாட்டேன் என்று முதல்வர் விஜய் கூறி இருக்கிறார். இதுபோன்று இதற்கு முன் இருந்த முன்னாள் முதல்வர்கள் ஒருநாள் கூட இப்படி சொன்னது கிடையாது.

விசில் அடித்து மக்கள் எல்லாம் ஓட்டு போட்டுள்ளனர். நம்பிக்கை இருக்கிறது, நாங்கள் முதற்கொண்டு எதிர்பார்த்தோம். எவ்வளவு பெரிய மாற்றம் இது. நியாயமாக நடக்க வேண்டும். ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is an independent National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP