NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

 70 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக அவிநாசி தொகுதிக்கு அமைச்சர்; யார் இவர் தெரியுமா?

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியில் உருவாக்கப்பட்டு, 70 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ., தமிழக அமைச்சரவையில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.

கடந்த 2026 தேர்தலில், அவிநாசி தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, 28 வயதே ஆன இளம் வேட்பாளர் கமலி, அமைச்சர் பொறுப்பேற்றார்; அவருக்கு கால்நடை பராமரிப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது.அவிநாசி தொகுதி, நீண்ட காலமாக அ.தி.மு.க.,வின் கோட்டையாகவே இருந்து வந்தது. கடந்த 1971 முதல் 2021 வரை நடந்த, 12 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 9 முறையும், தி.மு.க., 3 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.

கடந்த 2016 மற்றும், 2021 தேர்தலில் இரு முறையும் இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த அ.தி.மு.க.,வின் தனபால், தமிழக சட்டசபை சபாநாயகராக பதவி வகித்தார்.இதுவரை, கடந்த, 1984 தேர்தலில் லட்சுமி, 1991 – டாக்டர் சீனியம்மாள், 2006 – பிரேமா ஆகியோர் மூன்று பேர் மட்டுமே பெண் எம்.எல்.ஏ. க்களாக இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். ஆனால், இவர்களில் யாருக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதுவரை, அவிநாசி தொகுதிக்கு மாநில அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. தற்போது, கமலி அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அந்தக்குறை நிவர்த்தியாகியுள்ளது.

அமைச்சர் கமலி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். 1998ல் பிறந்த இவர், எம்.ஏ., (ஆங்கிலம்), பி.எட்., பட்டதாரி. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், அரசியலுக்கு வரும் முன் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் பச்சமுத்து ராசிபுரம் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். தம்பதியினருக்கு, 5 மாத பெண் குழந்தை உள்ளது. த.வெ.க., துவங்கியது முதலே கமலி ராசிபுரம் நகர மகளிர் அணி நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP