தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
-நமது நிருபர்-
த.வெ.க., அரசு ஐந்தாண்டுகள் தொடராது என்று திமுக இளைஞரணி கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக திமுக இளைஞரணி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடந்தது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
த.வெ.க., அரசு ஐந்தாண்டுகள் நீடிக்காது. நமக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தற்காலிகமானது. ஒரு நடிகரைப் பார்த்துச் சென்ற மக்கள் மீண்டும் நம்மிடம் தேடி வருவார்கள்.
சமூக வலைத்தளங்களை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலத்துக்கு ஏற்றார் போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும்.
திமுக விழுந்தாலும் எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கும் என்பதை நாம் அனைவருக்கும் காட்ட வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Source: Dinamalar